வீடு / சமையல் குறிப்பு / காளான் மஞ்சூரியன்

Photo of Mushroom Manchurian by Asiya Omar at BetterButter
1343
4
0.0(0)
0

காளான் மஞ்சூரியன்

Dec-28-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காளான் மஞ்சூரியன் செய்முறை பற்றி

காளானில் மஞ்சூரியன் செய்து பார்த்தேன்,வித்தியாசமான சுவையுடன் சூப்பர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டன் காளான்- 100 கிராம்
  2. பொரிக்க மாவுக்கு :-
  3. கார்ன் மாவு -1 மேஜைக்கரண்டி
  4. மைதா - 1- 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு,மிளகு - சிறிது
  6. தண்ணீர் கெட்டியாக கரைக்க.
  7. மஞ்சூரியன் செய்ய:-
  8. பொரித்த எண்ணெயில் இருந்து -1 மேஜைக்கரண்டி
  9. பச்சை மிளகாய் நறுக்கியது -1
  10. இஞ்சி,பூண்டு நறுக்கியது - தலா ஒரு தேக்கரண்டி
  11. வெங்காயம் நறுக்கியது -1
  12. சோயா சாஸ்,டொமட்டோ சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  13. சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
  14. மிளகு பொடித்தது -1 தேக்கரண்டி அல்லது சில்லி ப்ளேக்ஸ்
  15. உப்பு - சிறிது.
  16. கார்ன் மாவு -1 மேஜைக்கரண்டி + அரை கப் தண்ணீர்.

வழிமுறைகள்

  1. காளானை அலசி பேப்பர் டவலால் துடைத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
  2. மேற்கூறிய படி மாவு கரைத்து காளானை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. ஒரு கடாயில் மஞ்சூரியன் செய்ய எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி விட்டு நறுக்கிய இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.
  4. சாஸ் வகைகள் சேர்க்கவும்.பொரித்த காளான் சேர்த்து பிரட்டவும்.
  5. கார்ன் மாவு கரைசல் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.நறுக்கிய வெங்காயத்தாள் சேர்க்கவும்.
  6. தேவைப்பட்டால் தக்காளி கெச்சப் சேர்க்கவும் .பார்க்க அழகாக இருக்கும்.
  7. சுலபமாகச் செய்யக் கூடிய காளான் மஞ்சூரியன் தயார்.
  8. பட்டர் நாண், ப்ரைட் ரைஸ் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்