வீடு / சமையல் குறிப்பு / இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி)

Photo of Indian Scotch Egg Gravy ( Nargisi Koftas Gravy) by Hameed Nooh at BetterButter
323
4
0.0(0)
0

இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி)

Dec-29-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இந்திய ஸ்காட்ச் முட்டை க்ரேவி (நர்கிஸி கோப்தா க்ரேவி) செய்முறை பற்றி

ஹைதராபாத்தின் மிகவும் பிரபல்யமான இந்த கோப்தா சில மாற்றங்களுடன் சமைத்துள்ளேன்.சூடான சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் - கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் - பாதி
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
  5. உப்பு - சுவைக்கேற்ப
  6. முட்டை - 3
  7. சோளமாவு - 2 மேசைக்கரண்டி
  8. ப்ரட் க்ரம்ப்ஸ் - 1/2 கப்
  9. எண்ணெய் - பொரிக்க
  10. க்ரேவி செய்ய :
  11. பெரிய வெங்காயம் - 1
  12. தக்காளி - 1
  13. பட்டை - சிறிய துண்டு
  14. கிராம்பு - 1
  15. ஏலம் - 2
  16. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  17. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  18. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  19. தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
  20. க்ரீம் - 1 மேசைக்கரண்டி
  21. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. எலும்பில்லாத மட்டனில் மிளகுத்தூள் நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. 2 முட்டையை ஹாப் பாய்ல் செய்து தோலை உரித்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது முட்டையின் மீது அரைத்த கறி கலவையை நன்றாக கோட்டிங் செய்யவும்.
  4. மற்றொரு முட்டையை நன்றாக அடித்து கறியால் பூசிய முட்டையை அதிலே பிரட்டி எடுக்கவும்.
  5. சோள மாவில் தோய்த்து எடுத்து இன்னொரு முறை அடித்து வைத்த முட்டையில் முக்கி எடுக்கவும்.
  6. பிறகு ப்ரட் க்ரம்ப்ஸில் அனைத்து பகுதியும் படுமாறு பிரட்டி எடுத்து பத்து நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. க்ரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  8. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொரிந்ததும் தக்காளி மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
  9. பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  10. கடைசியாக க்ரீம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  11. இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை டீப் ப்ரை செய்து க்ரேவியுடன் சேர்த்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்