Photo of Paneer Green Peas Gravy by Surya Rajan at BetterButter
57
5
0.0(1)
0

Paneer Green Peas Gravy

Dec-29-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் : தேவையான அளவு ( 200 g )
  2. பட்டானி : தேவையான அளவு 100 கிராம்
  3. வெண்ணெய் : 3 - 4  மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் : 2
  5. தக்காளி : 1
  6. பட்டை : சிறிதளவு
  7. கிராம்பு : 2
  8. ஏலக்காய் : 1
  9. இஞ்சி : 1 இன்ச்
  10. பூண்டு : 6 பல்
  11. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  13. முந்திரி  : 6 - 8
  14. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  15. உப்பு : தேவையான அளவு
  16. கசூரி மேத்தி : சிறிதளவு

வழிமுறைகள்

  1. பனீரை சதுரமாக வெட்டி கொள்ளவும்.
  2. பட்டானியை வேக வைத்து தனியே வைக்கவும் .
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து  பட்டை , கிராம்பு ,ஏலக்காய், முந்திரி , சோம்பு , வெங்காயம்  சேர்த்து வதக்கவும் .
  4. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு , மிளகாய் தூள் , இஞ்சி,  பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பின் அவற்றை ஆற விட்டு மையாக அரைத்து கொள்ளவும்
  7. பின் அதே கடாயில் மேற்கூறிய கலவை , தேவையான தண்ணீர், பட்டானி சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  8. பின் பனீர் துண்டுகளை போட்டு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை, கசூரி மேத்தி சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  9. இறுதியாக பிரஷ் கிரீம் சேர்ப்பது சுவையை கூட்டும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-31-2017
Pushpa Taroor   Dec-31-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்