வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சால்னா

Photo of MUTTON CURRY by Munsila Fathima at BetterButter
240
5
0.0(0)
0

மட்டன் சால்னா

Dec-29-2017
Munsila Fathima
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சால்னா செய்முறை பற்றி

நெய் சோறு, இடியாப்பம், ரொட்டிக்கு பொருந்தும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் - 1/2 kg
  2. பட்டை, கிராம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
  3. தயிர் - 1 1/2 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது- 1/2 - 1 தேக்கரண்டி
  5. வெங்காயம் - 2 (பெரிது)
  6. தக்காளி - 1 (பெரிது)
  7. பச்சை மிளகாய் - 5
  8. மிளகாய் தூள் - 3 - 5 தேக்கரண்டி
  9. சீரக தூள் - 1 தேக்கரண்டி
  10. உப்பு, எண்ணெய் - தேவைக்கு
  11. புதினா - 1/2 கையளவு
  12. மல்லி இலை - அலங்கரிக்க
  13. அரைக்க:
  14. தேங்காய் - 2துண்டு
  15. முந்திரி - 5-8

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை, கிராம்பு தூள் சேர்த்து மணம் வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கும் போது பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதங்கிய பின் தக்காளி , மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி தயிர், சீரக தூள், புதினா சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டவும்.
  4. தண்ணீர் சேர்த்து 15 - 20 நிமிடம் விசில் போட்டு வேக விடவும்.
  5. தேங்காயுடன் முந்திரி சேர்த்து நன்கு மைய அரைக்கவும் .
  6. கறி வெந்ததா என்று பார்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வடை போகும் வரை மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்
  7. இறுதியில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்