மோர் கீரை | Moor keerai in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  29th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Moor keerai by Krishnasamy Vidya Valli at BetterButter
மோர் கீரைKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

4

0

3 votes
மோர் கீரை recipe

மோர் கீரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Moor keerai in Tamil )

  • ஏதாவது ஒரு வகை கீரை - பொடியாக நறுக்கியது - 1 கப்
  • தயிர் - 1 / 4 கப்
  • உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  • சுண்ணாம்பு - 1 சிட்டிகை
  • அரைப்பதற்கு :
  • தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  • மிளகாய் வத்தல் - 1
  • பச்ச மிளகாய் - 1
  • சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  • தாளிக்க : கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 2 சிட்டிகை
  • மிளகாய் வத்தல் - 1
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

மோர் கீரை செய்வது எப்படி | How to make Moor keerai in Tamil

  1. கீரையை நன்றாக அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. பாதி வெந்தவுடன் உப்பு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  4. மசித்த கீரையுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆறியதும் தயிர் கலக்கவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மோர் கீரையில் சேர்த்து பறிமாறவும்

எனது டிப்:

அரை கீரை அல்லது தண்டு கீரையில் செய்தால் சுவை அதிகம்

Reviews for Moor keerai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.