வீடு / சமையல் குறிப்பு / ஆல் இந்தியா கூட்டு

Photo of All India Kootu by Krishnasamy Vidya Valli at BetterButter
375
4
0.0(0)
0

ஆல் இந்தியா கூட்டு

Dec-29-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆல் இந்தியா கூட்டு செய்முறை பற்றி

எல்லா காய்களையும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். எல்லா கூட்டுகளிலும் பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு வேகவைத்து சேர்ப்பது பழக்கம். ஆனால் இந்த கூட்டில் கடலைபருப்பு வேகவைத்து சேர்ப்பார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எல்லா காய்கள் - பொடியாக நறுக்கியது - 2 கப்
  2. கடலைப்பருப்பு - 1 / 4 கப்
  3. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. அரைக்க :
  6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  7. ஊறவைத்த பச்சரிசி - 1 தேக்கரண்டி அல்லது அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  8. பச்ச மிளகாய் - 2
  9. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. பச்ச மிளகாய் - 1
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. பெருங்காயம் - 2 சிட்டிகை
  14. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அரிசியை ஊறவைக்கவும்.
  2. அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  3. காய்களை உப்பு மஞ்சள்பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  4. கடலை பருப்பை வேக வைத்து எடுக்கவும் .காய்களுடன் சேர்த்தும் வேக வைக்கலாம் அல்லது தனியாகவும் வேக வைக்கலாம்
  5. வெந்த காய்களுடன் பருப்பை சேர்க்கவும்
  6. அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடலாம்
  8. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும் . இந்த கூட்டு சப்பாத்திக்கு கூட தொட்டுக்கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்