வெந்தயப் புலாவ் | Methi Millet Pulao in Tamil

எழுதியவர் Hari Chandana P  |  31st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Methi Millet Pulao by Hari Chandana P at BetterButter
வெந்தயப் புலாவ்Hari Chandana P
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

519

0

வெந்தயப் புலாவ் recipe

வெந்தயப் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Methi Millet Pulao in Tamil )

 • 1 கப் தினை
 • 1 கப் வெந்தயக் கீரை, இறுக்கமாக கட்டப்பட்டது
 • 2 கப் தண்ணீர்
 • 1 1/2கப் நறுக்கிய தக்காளி
 • 1 கப் நறுக்கிய வெங்காயம்
 • 4-5 பச்சை மிளகாய்
 • 3-4 பூண்டு பற்கள்
 • 1 சிறிய துண்டு இஞ்சி
 • 1 1/2 இன்ச் துண்டு இலவங்கப்பட்டை குச்சி
 • 3 கிராம்பு
 • 2 ஏலக்காய்
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • கொஞ்சம் முந்திரி பருப்பு
 • சுவைக்கேற்ற உப்பு

வெந்தயப் புலாவ் செய்வது எப்படி | How to make Methi Millet Pulao in Tamil

 1. பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை கரடுமுரடானச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம், முந்திரி பருப்பைச் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.
 3. பழுப்பானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். அரைத்த மசாலாவை அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இப்போது கழுவிய வெந்தயக் கீரையைச் சேர்த்து உதிரும்வரை வறுக்கவும்.
 4. பிறகு கழுவி வடிக்கட்டிய தினை, தக்காளி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வைக்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

பிரஷர் குக்கரில் சமைக்க தேங்காய் பாலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Methi Millet Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.