வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பகோடா

Photo of Brinjal Pakoda by Shyamala Kumar at BetterButter
1745
25
0.0(0)
0

கத்திரிக்காய் பகோடா

Jan-31-2016
Shyamala Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிக்காய் (குறைவான விதைகள் உள்ளவை) - 2 அல்லது 3, நடுத்தர அல்லது பெரிய அளவிலானது
  2. கடலை மாவு - 1 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. சுவைக்கு உப்பு
  5. சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி ( அல்லது சுவைக்கேற்றபடி)
  6. மிளகுப்பொடி 1 அல்லது 2 சிட்டிகைகள்
  7. சீரகம் 1/4 தேக்கரண்டி, கரடுமுரடாக பொடி செய்யப்பட்டது
  8. சமையல் சோடா ஒரு சிட்டிகை
  9. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயைக் கழுவி மெல்லிய வட்டமாக வெட்டிக்கொள்ளவும். அவற்றை தண்ணீரில் முழ்கச்செய்யவும். நாம் பயன்படுத்தும்வரை கத்திரிக்காய் நிறம் மாறாமல் இருப்பதற்காக.
  2. கடலை மாவைச் சலித்து கட்டிகள் ஏதாவது இருந்தால் நீக்கவும். கடலைமாவை, அரிசி மாவு, சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகப்பொடி, சமையல் சோடாவுடன் ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
  3. ஒரு வானலியில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. கத்திரிக்காய்த் துண்டுகளை வடிக்கட்டித் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. எண்ணெய் சூடானது, ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய் எடுத்து கடலை மாவுக் கலவையில் ஊற்றவும். தண்ணீர் பயன்படுத்தி நன்றாகக் கலக்கி தோசை மாவு பதத்திற்கு சாந்தாகச் செய்துகொள்ளவும்.
  5. தீயை நடுத்திரமான சூட்டில் வைத்துக்கொள்க. கத்திரிக்காய் துண்டுகளை மாவும் முக்கியெடுத்து பொன்னிறமாகும்வரை பொறித்து எடுக்கவும்.
  6. கூடுதல் எண்ணெயை நீக்குவதற்கு சமையல் டிஷ்யூவில் வடிக்கட்டி எந்த சட்டினியுடனும் அல்லது சாசுடனும் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்