வீடு / சமையல் குறிப்பு / தணலில் வாட்டிய கத்திரிக்காய் கறி

Photo of Smoked Eggplant Curry (Baingan Ka Bharta) by Hameed Nooh at BetterButter
407
4
0.0(0)
0

தணலில் வாட்டிய கத்திரிக்காய் கறி

Dec-30-2017
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தணலில் வாட்டிய கத்திரிக்காய் கறி செய்முறை பற்றி

கத்திரிக்காயை தீயில் வாட்டி அதன் பல்பை குழம்பில் சேர்ப்பதால் இதிலே அதன் அரோமா வித்தியாசமானதாக இருக்கும்.நான் இதிலே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் தயாரித்தேன். ரொட்டி நான் சாதத்தோடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் - 2
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  3. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  4. தக்காளி - 2
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  8. நெய் - 1 மேசைக்கரண்டி
  9. பச்சை மிளகாய் - 1
  10. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - 6
  12. கசூரி மேத்தி - 1 மேசைக்கரண்டி
  13. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கத்திரிக்காய்களை கழுவி நன்றாக துடைக்கவும்.
  2. அதன் மேல் எண்ணெய் தடவி அடுப்பின் தணலில் நேராக காண்பித்து நன்றாக அனைத்து பகுதியும் வெந்ததும் எடுக்கவும்.
  3. தோலை உரித்து எடுத்து உள்ளே உள்ள சதையை கரண்டியால் எடுத்து வைக்கவும்.
  4. கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் மற்றும் கருவைப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக ஆனதும் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  6. மசாலா பொருட்களை உப்பு சேர்த்து வேக விடவும்.
  7. எண்ணெய் க்ரேவியை விட்டு பிரிந்து வந்ததும் கசூரி மேத்தி மற்றும் கத்திரிக்காய் சதையை அரை கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
  8. வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்