வீடு / சமையல் குறிப்பு / சுட்ட கத்தரிக்காய் கொத்சு

Photo of Sutta katharikai kothsu by Krishnasamy Vidya Valli at BetterButter
1274
3
0.0(0)
0

சுட்ட கத்தரிக்காய் கொத்சு

Dec-30-2017
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுட்ட கத்தரிக்காய் கொத்சு செய்முறை பற்றி

இது நோ கார்லிக் நோ ஆனியன் வகையை சேர்ந்தது. பெரிய கத்தரிக்காயை சுட்டு செய்வது. முன்காலத்தில் கறிஅடுப்பில்/குமுட்டி அடுப்பில் சுட்டு செய்வார்கள். இப்போது யாரும் அப்படி செய்வதில்லை. வதக்கி தான் செய்கிறார்கள். ஆனால் இந்த ரெசிப்பி கேஸ் அடுப்பில் பழைய முறைப்படி சுட்டு செய்வது பற்றியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய கத்தரிக்காய் - 1
  2. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  7. புளி-ஒருபாதிநெல்லிக்காய்அளவு
  8. தாளிக்க :
  9. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  10. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. மிளகாய் வத்தல் - 1
  14. பச்ச மிளகாய் - 1
  15. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  16. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் மேக்ஸிம் பெரிய அளவில் எடுத்து கொள்ளவும்
  2. கத்தரிக்காய் மேல் எண்ணெய் தடவி கேஸ் அடுப்பில் சின்ன ஸ்டான்ட் வைத்து சுடவும்
  3. கத்தரிக்காய் காம்பு பிடித்து திருப்பி திருப்பி சுட்டு தோல் கருப்பு ஆகி வேகும் வரை சுடவும்
  4. ஆறவிட்டு தோல் உரித்து வைக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து உரித்த கத்தரிக்காயை போட்டு வதக்கவும்
  6. புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி கட்டி பெருங்காயம் வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  7. கெட்டியானதும் இறக்கி கொத்தமல்லி இலை தூவினால் அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்