வீடு / சமையல் குறிப்பு / காய்கறி வெள்ளை குருமா

Photo of Veg vellai kurma by Asiya Omar at BetterButter
989
4
0.0(0)
0

காய்கறி வெள்ளை குருமா

Dec-31-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி வெள்ளை குருமா செய்முறை பற்றி

இந்த ரெசிப்பி படி செய்து பாருங்க,சுவைக்கு நான் கேரண்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட்,உருளைக்கிழங்க,பீன்ஸ்,காளிப்ளவர்,பச்சைப் பட்டாணி - சேர்த்து கால் கிலோ
  2. இதில் உள்ள காய்கள் 3 வகை இருந்தாலும் சரி
  3. எண்ணெய்-1-2 மேஜைக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் -1
  5. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  7. நறுக்கிய மல்லி புதினா- சிறிது.
  8. சிறிய பாதி எலுமிச்சை பழச்சாறு.
  9. உப்பு - தேவைக்கு.
  10. அரைக்க தே.பொ:-
  11. தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி
  12. பச்சை மிளகாய் -3 அல்லது 4
  13. முந்திரி பருப்பு உடைத்தது -2 மேஜைக்கரண்டி
  14. சோம்பு -1 தேக்கரண்டி.

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.அரைக்கச் சொன்னவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் சூடானவுடன் வெங்காயம் வதக்கி ,இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்
  3. காய்கறிகள் சேர்த்து பிரட்டி விட்டு,தேவைக்கு தண்ணீர், சுவைக்கு உப்பு சேர்த்து வேக விடவும்.
  4. முக்கால் வேக்காடு ஆனதும் தேங்காய் அரைத்தது சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,அடுப்பை மீடியமாக வைத்து கொதிக்க விடவும்.
  5. கொதி வந்தததும் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் வாடை மடங்கியதும் நறுக்கிய மல்லி,புதினா சேர்த்து,சிறிய பாதி எலுமிச்சை பிழிந்து அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான வெஜ் வெள்ளை குருமா தயார்.சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்