Photo of White beans curry by Asiya Omar at BetterButter
1654
4
0.0(2)
0

White beans curry

Dec-31-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

White beans curry செய்முறை பற்றி

காய்ந்த வெள்ளை பீன்ஸ் ஊற வைத்து கறி செய்தால் சாதம், சப்பாத்திக்கு பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊற வைத்த வெள்ளை பீன்ஸ் -100 கிராம்
  2. வெங்காயம் நறுக்கியது பெரியது -1
  3. தக்காளி நறுக்கியது பெரியது -1
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி
  7. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  8. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  9. நறுக்கிய மல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. காய்ந்த வெள்ளை பீன்ஸ் அலசி நன்கு ஊறவைத்து தயார் ஆகி இருக்கட்டும். நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயார் செய்யவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.உப்பு சேர்த்து மூடி வதங்க விடவும்.
  4. மசாலா தூள்கள் அனைத்தும் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு ஊறிய வெள்ளை பீன்ஸ் சேர்க்கவும்.உப்பு தேவைக்குச் சேர்க்கவும்.
  5. அடுத்து ஒரு கப் அல்லது தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 4 விசில் வைக்கவும்.
  6. ஆவியடங்கியவுடன் திறந்து நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
  7. சப்பாத்தி,சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Nachiya
Jan-06-2018
Ahamed Nachiya   Jan-06-2018

super

Pushpa Taroor
Jan-06-2018
Pushpa Taroor   Jan-06-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்