Photo of Ladies finger tamarind curry by Karuna pooja at BetterButter
537
7
0.0(1)
0

Ladies finger tamarind curry

Dec-31-2017
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 250 கிராம்
  2. புளி சிறிய கோழி குண்டு அளவு
  3. சின்ன வெங்காயம் 100
  4. தக்காளி 100 ( அதிகம் பழுக்காதது)
  5. மல்லி தூள் 1 ¼ மே.க
  6. மிளகாய்த்தூள் 1 மே .க
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. பூண்டு 10 பல்
  9. கருவேப்பிலை சிறிது
  10. நல்லெண்ணெய் 3 மே.கரண்டி
  11. தேங்காய் 1 ½ துண்டு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிறிது எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பதமாக வறுத்து எடுத்து வைக்கவும்.....
  2. புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்....
  3. சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயம்/பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கவும்.......
  4. வதங்கியதும்,மல்லி தூள் , மிளகாய் தூள் இவற்றை நன்கு வதக்கவும்.... மிகச்சிறிய தீயில்......
  5. தக்காளியை வறுத்து ஆறவிடவும்....
  6. தேங்காய் சேர்த்து வறுத்த பொருட்களை அரைக்கவும்....
  7. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் பொரிய விடவும்...
  8. சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்....
  9. வறுத்த வெண்டைக்காய் சேர்க்கவும்...
  10. பின்னர் அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்....
  11. ஒரு கொதி வந்ததும் ,புளி நீர் சேர்த்து கொதித்ததும்,
  12. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்....
  13. சிறிய தீயில் வைத்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்......
  14. இப்போது சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார்....
  15. சாதத்துடன் நல்ல சுவையான துணை உணவு.....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-31-2017
Pushpa Taroor   Dec-31-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்