வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish Curry by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
444
5
0.0(0)
0

மீன் குழம்பு

Dec-31-2017
பிரசன்னா பிரசன்னா NT
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

எங்க கிராமத்தில் ஏறி மீன் கிடைத்தால் இவ்வாறு செய்வோம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் ஒரு கிலோ
  2. நல்லெண்ணெய் 100 கிராம்
  3. சின்ன வெங்காயம் கால் கிலோ
  4. தக்காளி ஒன்று
  5. ஒரு முழு பூண்டு
  6. புளி 50 கிராம்
  7. தாளிக்க:வெந்தயம்,கடுகு,சீரகம்,காய்ந்த மிளகாய் 5,பெருங்காயத்தூள்.
  8. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  9. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  10. சீரக தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீனை மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கழுவவும்.
  2. தாளிக்க தேவையான பொருட்கள்
  3. வெங்காயம் உரித்து கொள்ளவும்.
  4. புளியை கரைத்து அதில் மசாலா பொருட்களை உப்புடன் சேர்த்து கலக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தூள்,கடுகு,வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  6. வெங்காயம்,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதி விடவும்.
  9. நன்கு திக்காக வரும் வரை கொதி விடவும்.
  10. சுத்தம் செய்த மீனை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.சிறிது நேரம் இருந்தால் போதும் மீன் சீக்கிரம் வெந்து விடும்
  11. மீன் வெந்ததும் ஒரு ஸ்பூன் நல்ல சுத்தமான விளக்கெண்ணை விட்டு சிறிது நேரம் கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்