வீடு / சமையல் குறிப்பு / தாபா முட்டை கறி

Photo of EGG CURRY by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
297
5
0.0(0)
0

தாபா முட்டை கறி

Dec-31-2017
பிரசன்னா பிரசன்னா NT
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தாபா முட்டை கறி செய்முறை பற்றி

ரொட்டி,நான்,fride rice போன்றவற்றிற்கு ஏற்ற சுவையான தொடு கறி.

செய்முறை டாக்ஸ்

  • கோவா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த முட்டை 2
  2. ஒரு வெங்காயம் அரைத்து கொள்ளவும்
  3. இரண்டு தக்காளி அரைத்து கொள்ளவும்
  4. பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. அரைக்க:தேங்காய்,முந்திரி 4,ஒரு பட்டை,2 லவங்கம் சேர்த்து அரைக்கவும்.
  6. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  7. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  8. சீரக தூள் கால் ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு.
  10. எண்ணெய் ஒரு குழி கரண்டி.

வழிமுறைகள்

  1. வேகவைத்த முட்டை,வெங்காயம்,பூண்டு,தக்காளி விழுது எடுத்து கொள்ளவும்.
  2. தேங்காய்,முந்திரி,பட்டை,லவங்கம் அரைத்து கொள்ளவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்.
  4. வெங்காய விழுது சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  6. அனைத்து மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து வரும் போது வேகவைத்த முட்டையை போடவும்.
  8. அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  9. நன்கு கொதித்து வரும் போது சிறிது சீரக தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  10. பச்சை வாசனை போனதும் ருசிப்பார்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்