இஞ்சி ரசம் | Ginger rasam in Tamil

எழுதியவர் Surya Rajan  |  31st Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ginger rasam by Surya Rajan at BetterButter
இஞ்சி ரசம்Surya Rajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2

0

3 votes
இஞ்சி ரசம் recipe

இஞ்சி ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ginger rasam in Tamil )

 • இஞ்சி : 1 இன்ச்
 • புளி : நெல்லி அளவு
 • பூண்டு : 4 பல்
 • தக்காளி : 1
 • பெருங்காய தூள் : ½ மேஜைக்கரண்டி
 • மல்லி தூள் : ½ மேஜைக்கரண்டி
 • மிளகாய் தூள் : ½ மேஜைக்கரண்டி
 • சீரகம் : ½ மேஜைக்கரண்டி
 • மிளகு : ½  மேஜைக்கரண்டி
 • மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
 • கொத்தமல்லி தழை : சிறிதளவு
 • உப்பு : தேவையான அளவு
 • தாளிக்க
 • கடுகு : ½  மேஜைக்கரண்டி
 • கருவேப்பிலை : சிறிதளவு
 • எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் : 1

இஞ்சி ரசம் செய்வது எப்படி | How to make Ginger rasam in Tamil

 1. சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும் . இஞ்சி னை துருவி எடுத்து கொள்ளவும்
 2. பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் , புளி யை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் . தக்காளி யை அரைத்து எடுத்து கொள்ளவும் .
 3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை, சிவப்பு மிளகாய்  தாளித்து பின் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து ½ நிமிடம் வதக்கவும்
 4. பின் அரைத்து வைத்த சீரகம் மிளகு தூள் சேர்க்கவும்
 5. பின் 10 செகண்ட் கழித்து அரைத்த தக்காளி, புளி  தண்ணீர், உப்பு  சேர்க்கவும் . பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லிதூள் சேர்க்கவும்
 6. ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை , பெருங்காய தூள்  சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews for Ginger rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.