வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு நாட்டுக்கோழி சிக்கன் செமி கிரேவி

Photo of Chettinaad Naatukozhi chicken semi gravy by Adaikkammai Annamalai at BetterButter
67
6
0.0(0)
0

செட்டிநாடு நாட்டுக்கோழி சிக்கன் செமி கிரேவி

Dec-31-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு நாட்டுக்கோழி சிக்கன் செமி கிரேவி செய்முறை பற்றி

ருசியான வித்தியசமான கிரேவி... இதில் நான் தயிர் சேர்த்து செய்திருக்கிறேன் அதனால் கோழி திகட்டாமல் சாப்பிடாலாம்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • சௌத்இந்தியன்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. எண்ணெய் - 3 ஸ்பூன்
 2. வெந்தயம் -1/4ஸ்பூன்
 3. உளுந்து -1 ஸ்பூன்
 4. கருவேப்பிலை - சிறிது
 5. வெங்காயம் - 2
 6. தக்காளி - 2
 7. இஞ்சி பேஸ்ட் - 2 ஸ்பூன்
 8. தயிர் -2 ஸ்பூன்
 9. கோழி - 500gm
 10. உப்பு - தேவையான அளவு
 11. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்.,
 12. வரமிளகாய் - 10 (தேவையான கார அளவு)
 13. மல்லி - 2 ஸ்பூன்
 14. முந்திரி -2
 15. இஞ்சி -சிறுதுண்டு
 16. மிளகு -1 ஸ்பூன்
 17. தேங்காய் பூ -2ஸ்பூன்
 18. மிளகு -2 ஸ்பூன்
 19. சோம்பு - 1 ஸ்பூன்
 20. இவைகளை அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்

வழிமுறைகள்

 1. முதலில் கோழியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்து கொள்ளளவும்
 2. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்.
 3. பின் எண்ணையை ஊற்றி வெந்தயம் , உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
 4. பொரிந்த பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
 5. பின் இஞ்சி மற்றும் கொத்தமல்லி பொடிதாக நறுக்கி உப்பு சேர்த்து போட்டு வதக்கவும்
 6. பின் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்
 7. நன்றாக வதங்கிய பின் அரைத்த மசலாவில் இருந்து 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்து காரத்திற்கு தேவையான லவு போட்டு நன்டறாக வதக்கவும்ம்.
 8. நன்றாக வதங்கிய பின் சுத்தம் செய்த கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்
 9. வதக்கிய கோழி சற்று நேரம் மூடி வைக்கவும் .. அப்பொழுதுதான் கொலையில் உள்ள தண்ணி இறங்கும் ... அதனால் தண்ணீர் ஊற்றாமல் வதக்கி மூடி வைக்கவும்
 10. ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவேண்டும் அப்பொழுது தன்னவ்ர் இறங்கி இருக்கும்
 11. அதன் பின் உப்பு பார்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விஜடவும் அடுப்பை புள்ளில் வைத்து
 12. மூடி வைத்து கொதிக்கக விடவும் கோழி வேகும் வரை
 13. நன்றாக கோழி வெந்து கொதித்த பின் பிரட்டி கிரேவி யாக அள்ளவும்
 14. சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்