வீடு / சமையல் குறிப்பு / திருவாதிரை களி

Photo of THIRUVATHIRAI KALI by Subhashni Venkatesh at BetterButter
1842
4
0(0)
0

திருவாதிரை களி

Dec-31-2017
Subhashni Venkatesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருவாதிரை களி செய்முறை பற்றி

மார்கழி மாதம் ஆருத்ரா பண்டிகைக்காக செய்யப்படும் நேவித்யம்.நாளை ஜனவரி 2 இந்த பண்டிகை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రాథమిక వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 2 கப்
  2. பாசி பருப்பு 2 தேக்கரண்டி
  3. வெல்லம் பொடித்தது
  4. ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் 5 மேஜை கரண்டி
  6. நெய் 3 மேஜை கரண்டி
  7. முந்திரிப்பருப்பு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் அரிசியை மிதமான சூட்டில் நல்ல பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  2. பாசிபருப்பும் சிவக்க வறுத்து கொள்ளவும்.
  3. இரண்டையும் மிக்சியில் பொடிக்கவும். மிக நைசாக இருக்க கூடாது.
  4. மிக மெல்லிய ரவை போன்று இருக்க வேண்டும்.
  5. இப்பொழுது மாவின் அளவிற்கு 2 மடங்கு வெல்லம் பொடித்து வெந்நீரில் கரைத்து , வடிகட்டி வைத்து கொள்ளவும்.
  6. ஒரு கப் மாவிற்கு 3 1|2 கப் தண்ணீர்.
  7. ஒரு பாத்திரத்தில் அரிசி,பருப்பு பொடி, வெல்ல தண்ணீர், சிட்டிகை உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து பின் சிம்மில் 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.
  8. திறந்து அதில் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து, ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்