உலர் பழ வானவில் சாதம் | Dry Fruit Rainbow Rice in Tamil

எழுதியவர் Arti Gupta  |  1st Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Dry Fruit Rainbow Rice recipe in Tamil,உலர் பழ வானவில் சாதம், Arti Gupta
உலர் பழ வானவில் சாதம்Arti Gupta
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

609

0

உலர் பழ வானவில் சாதம் recipe

உலர் பழ வானவில் சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Dry Fruit Rainbow Rice in Tamil )

 • 1 கப் அரிசி
 • 2 தேக்கரண்டி நெய்
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • ½ தேக்கரண்டி சீரகம்
 • ½ தேக்கரண்டி உப்பு
 • 10 – 15 முந்திரி பருப்பு
 • 10 பாதாம் பருப்பு
 • 10 உலர் திராட்சை
 • கொஞ்சம் சமையல் நிறமி, மஞ்சள், பச்சை, பிங்க்

உலர் பழ வானவில் சாதம் செய்வது எப்படி | How to make Dry Fruit Rainbow Rice in Tamil

 1. அரிசியைச் சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு பிரஷர் குக்கரில் நெய்யைச் சூடுபடுத்தி பெருங்காயம் சீரகம் சேர்க்கவும்.
 3. அவை வெடிக்க ஆரம்பித்ததும், உலர் பழங்களைச் சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
 4. அரிசியையும் உப்பையும் சேர்க்கவும். அரிசியின் அளவிற்கு மேல் தண்ணீரை ஊற்றவும்.
 5. உயர் தீயில் பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வைக்கவும். ஆறவிட்டு ஆவி அடங்கியதும் திறக்கவும்.
 6. இப்போது சில துளிகள் நிறமிகளைத் தண்ணீர் மீது தெளிக்கவும். கிளரவேண்டாம்.
 7. மீண்டும் 4 விசில்களுக்கு உயர் தீயில் வேகவைக்கவும்.
 8. அவற்றைக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

உங்கள் அடுப்பைப் பொறுத்து விசில்களின் எண்ணிக்கை மாறுபடும். நோக்கம் எண்ணவென்றால் அரிசி அரைவேக்காடாக இருக்கும் போது நிறத்தைச் சேர்ப்பதுதான்.

Reviews for Dry Fruit Rainbow Rice in tamil (0)