வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கார குழம்பு

Photo of Bringal kara kulambu by neela karthik at BetterButter
590
3
0.0(0)
0

கத்தரிக்காய் கார குழம்பு

Jan-01-2018
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கார குழம்பு செய்முறை பற்றி

கத்தரிக்காய் புளி குழம்பு ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 5
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  4. வரமிளகாய் 2
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  9. கடுகு சிறிது
  10. எண்ணெய் தாளிக்க
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. தேங்காய் 1/4 கப்
  13. புளிகரைசல் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காயை விழுதாக அரைக்கவும் வெந்தயம் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. அதனுடன் நீளவாக்கில் அரிந்த கத்தரிக்காயை சேர்த்து பின் மிளகாய் தூள் மல்லிதூள் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்
  5. கிளறி விட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. காய் வெந்ததும் புளி கரைசல் சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  7. புளி கரைசல் கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
  8. 5 நிமிடம் கொதித்ததும் வெந்தயதூள் பெருங்காயதூள் சேர்த்து கிளறி இறக்கவும்
  9. எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து பரிமாறவும்
  10. வெங்காயம் தக்காளியை வதக்கி விழுதாக சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்