வீடு / சமையல் குறிப்பு / பிடி கருணைக்கிழங்கு மசியல்

Photo of Yam masiyal by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
528
4
0.0(0)
0

பிடி கருணைக்கிழங்கு மசியல்

Jan-01-2018
Muthulakshmi Madhavakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிடி கருணைக்கிழங்கு மசியல் செய்முறை பற்றி

பிடி கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் மாதத்தில் இரண்டு முறை இந்த கிழங்கை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மசியல் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கு சூப்பரான ஸைடு டிஷ். புளி கரைசல் கண்டிப்பாக சேர்க்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 6 பிடி கருணைக்கிழங்கு
  2. 20 சின்ன வெங்காயம்
  3. சிறிய எலுமிச்சை அளவு புளி
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. 1/2 டீஸ்பூன் சீரகம்
  8. 3 பூண்டு பற்கள்
  9. 1/2 டீஸ்பூன் கடுகு
  10. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. கறிவேப்பிலை
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருணைக் கிழங்கை சுத்தமாக மண் ஏதும் இல்லாமல் கழுவி கொள்ளவும். குக்கரில் 1/2 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  2. வேகவைத்த கிழங்குகளை ஆறவைத்து தோலுரித்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். பின் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். வேகவைத்த கிழங்கை மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கிழக்கு, அரைத்த விழுது, மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. கனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து மற்றும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. அவை நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  6. பின் கலந்த கிழங்கு கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
  7. 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். கிளறும் போது சிறிது நல்லெண்ணெயை மசியலை சுற்றி விடவும். மசியல் நன்கு கெட்டியான பின் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்