வீடு / சமையல் குறிப்பு / கருப்பு கொண்டைக்கடலை மசாலா

Photo of Black chana dal masala by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
499
3
0.0(0)
0

கருப்பு கொண்டைக்கடலை மசாலா

Jan-01-2018
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பு கொண்டைக்கடலை மசாலா செய்முறை பற்றி

கருப்பு கொண்டைக்கடலை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபம். அரைக்கும் வேலை ஏதும் இல்லை. ஊறவைத்த கடலை இருந்தால் 20 நிமிடத்தில் சுவையான மசாலா ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் கருப்பு கொண்டைக்கடலை
  2. 1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்
  3. 1 தக்காளி, பொடியாக நறுக்கவும்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
  10. 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  11. 1 பிரிஞ்சி இலை
  12. 2 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம்
  13. சிறிது கொத்தமல்லி இலை
  14. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருப்பு கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பின் ஊறவைத்து வடிகட்டிய கருப்பு கொண்டைக்கடலை, 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து குறைந்த தீயில் 7 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
  6. அவை வெந்ததும் உலர்ந்த மாங்காய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் தூவி ஃபிரஷ் கிரீம் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்