வீடு / சமையல் குறிப்பு / முட்டை வடை குழம்பு

Photo of Egg Vadai Kuzhambu by Ayesha Ziana at BetterButter
782
4
0.0(0)
0

முட்டை வடை குழம்பு

Jan-02-2018
Ayesha Ziana
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை வடை குழம்பு செய்முறை பற்றி

அரிசி, பருப்பு, முட்டை வைத்து பொரித்த வடையை, ருசியான குழம்பில் சேர்த்து பரிமாறும் சுவையான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை வடை செய்ய: புழுங்கல் அரிசி 1/4 கப்
  2. துவரம் பருப்பு 1/2 கையளவு
  3. முட்டை 1
  4. வெங்காயம் 1/2 பொடியாக நறுக்கியது
  5. கறிவேப்பிலை சிறிது
  6. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. எண்ணெய் பொரிக்க
  10. அரைக்க: தேங்காய் 1/2 கப்
  11. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  13. மல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
  14. சோம்பு 1/2 ஸ்பூன்
  15. மற்ற பொருட்கள்: வெங்காயம் 1/2
  16. பூண்டு 5 பல்
  17. தக்காளி 3/4
  18. பட்டை சிறு துண்டு
  19. கிராம்பு 3
  20. சோம்பு 1/2 ஸ்பூன்
  21. புளி எலுமிச்சை அளவு
  22. உப்பு தேவைக்கு
  23. தண்ணீர் தேவைக்கு
  24. எண்ணெய் சிறிது
  25. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வடை செய்ய: அரிசியையும் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பஞ்சு போன்ற வடை தயார்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  3. குழம்பு செய்ய: வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் வெங்காயம், அதன் பின் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, கரைத்த புளி, அரைத்த கலவை, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு தயார்.
  6. குழம்பு ஆறியதும், அதில் பொரித்த வடைகளைப் போட்டு பரிமாறவும்.
  7. சூப்பரான முட்டைவடை குழம்பு தயார். இது சாதம், சப்பாத்தி போன்றவையுடன் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்