வீடு / சமையல் குறிப்பு / க்ரேவி சிக்கன் மோமோஸ்

Photo of Gravy Chicken Momos by Hameed Nooh at BetterButter
289
4
0.0(0)
0

க்ரேவி சிக்கன் மோமோஸ்

Jan-02-2018
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரேவி சிக்கன் மோமோஸ் செய்முறை பற்றி

மோமோஸை அவித்து பிறகு பொறித்து காரசாரமான க்ரேவியில் சேர்த்து சாப்பிடப்படும் இந்த நேபாலியன் க்ரேவி மிகவும் சுவையானதாக இருக்கும். நான் ரொட்டி ப்ரைட் ரைஸ் போன்றவற்றோடு சாப்பிட உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 1 கப்
  2. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. உப்பு - 1/2 தேக்கரண்டி
  4. தண்ணீர் - 1/4 கப்
  5. அரைத்த சிக்கன் - 1 கப்
  6. நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  8. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  9. சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கேற்ப
  11. க்ரேவி செய்ய :
  12. நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  13. நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
  14. நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
  15. ரெட் சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
  16. தக்காளி கெட்சப் - 1/4 கப்
  17. சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  18. வினிகர் - 1/4 தேக்கரண்டி
  19. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  20. உப்பு - சுவைக்கேற்ப
  21. பச்சை மிளகாய் - 2
  22. நறுக்கிய மல்லித்தழை - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா எண்ணெய் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனோடு இஞ்சி பூண்டு விழுது மிளகு தூள் சோயா சாஸ் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. அரை மணி நேரம் கழித்து மாவை உருண்டைகள் பிடித்து வட்டமாக வளர்த்து நடுவில் சிக்கன் கலவையை வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி மோமோஸ் வடிவில் பிடிக்கவும்.
  4. அதனை மோமோஸ் அவிக்கும் பாத்திரத்தில் தட்டில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் அவித்தெடுக்கவும்.
  5. பிறகு எண்ணெயில் மிதமான சூட்டில் இளம் பொன்னிறமாக ஆகும் வரை பொறித்தெடுக்கவும்.
  6. கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் சாஸ்கள் வினிகர் ஊற்றவும்.
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
  8. பிறகு பொறித்தெடுத்த மோமோஸ்களை க்ரேவியில் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்