வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் அவியல்

Photo of Bottle gourd in curd and coconut by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
928
3
0.0(0)
0

சுரைக்காய் அவியல்

Jan-02-2018
Muthulakshmi Madhavakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் அவியல் செய்முறை பற்றி

சுரைக்காய், கடலைப் பருப்பு, தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து செய்யும் ஆரோக்கியமான அவியல். சாம்பார், புளிக்குழம்பிற்கு சூப்பரான ஸைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 சுரைக்காய்
  2. 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு (1 மணி நேரம் ஊறவைக்கவும்)
  3. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  4. 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. 1/4 டீஸ்பூன் கடுகு
  6. 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. சிறிது கறிவேப்பிலை
  8. அரைக்க
  9. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 2 சின்ன வெங்காயம்
  12. 1 பூண்டு பல்
  13. 1/2 டீஸ்பூன் சீரகம்

வழிமுறைகள்

  1. சுரைக்காயின் தோலை சீவி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து கொள்ளவும். பின் நீளமாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு‌ மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஊறவைத்த கடலைப் பருப்பு 1/4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும். நடுவில் குலுக்கி விட்டு வேகவைக்கவும்.
  3. சுரைக்காய் நன்கு வெந்ததும் அரைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  4. சீரகத்தின் பச்சை வாசனை போனதும் கெட்டியான தயிரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
  5. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவியலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்