பருப்பு உருண்டை குழம்பு | Paruupu urundai curry in Tamil

எழுதியவர் Adaikkammai annamalai  |  2nd Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paruupu urundai curry by Adaikkammai annamalai at BetterButter
பருப்பு உருண்டை குழம்புAdaikkammai annamalai
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

13

0

0 votes
பருப்பு உருண்டை குழம்பு recipe

பருப்பு உருண்டை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Paruupu urundai curry in Tamil )

 • எண்ணெய் - 6 ஸ்பூன்
 • கடுகு - 1/2 ஸ்பூன்
 • உளுந்து - 1 ஸ்பூன்
 • வெந்தயம் - 1/4 ஸ்பூன்
 • சோம்பு - 1/2 ஸ்பூன்
 • வர மிளகாய் - 1 கிள்ளி போட
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 2
 • உப்பு - தேவயனா அளவு
 • தேங்காய் பால் - 1 கப் கெட்டியாக
 • உருண்டைக்கு அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
 • துவரம் பருப்பு 1 கப்
 • வரமிளகாய் - 3 ( காரத்திற்கு தேவையான அளவு)
 • உப்பு - சிட்டிகை
 • சோம்பு - 1 ஸ்பூன்
 • கர கரவென்று அரைத்து வைக்கவும்.
 • தேவையான பொருட்கள்
 • வரமிளகாய் - 5
 • காய்ந்த மல்லி - 2 ஸ்பூன்
 • தேங்காய் பூ - 2 ஸ்பூன்
 • இஞ்சி - சிறுதுண்டு
 • இவைகளை அரைத்து எடுத்து கொள்ளவும் . அரைத்து எடுத்து புளி கரைத்து வைத்த தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் சேர்த்து கரைத்து எடுத்துகொள்ளவும்.

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி | How to make Paruupu urundai curry in Tamil

 1. முதலில் உருண்டைக்கு பருப்பு ஊற வைக்கவேண்டும். அதன் பின் ஊற வைத்த பருப்பை அலசி மிக்சியில் இடித்து கொள்ளவும் .
 2. அதனுடன் மிக்ஸியில் சோம்பு... உப்பு... (கொஞ்சமாக) வரமிளகாய் சேர்க்கவும்.
 3. இதை கர கரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்
 4. இதனுடன் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து உருண்டை பிடித்து வைக்கவும்
 5. அதன் பின் மசாலா அரைக்க தேவையான பொருளை எடுக்கவும்
 6. நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும் .
 7. அதன் பின் தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும் கெட்டியாக.
 8. அதனுடன் புளி கரைத்து எடுத்து அதில் அரைத்த மிளகாய் மசலவில் இருந்து 3 ஸ்பூன் தேவையா அளவு எடுத்து கரைத்து ரெடியாக வைக்கவும்.
 9. இப்பொழுது ஒரு இருப்பு சட்டியை காய வைத்து எண்ணி சேர்த்து கடுகு .. உளுந்து... சோம்பு.. வெந்தயம்.. வரமிளகாய்... கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்
 10. அதன் பின் வெங்காயம் ... தக்காளி...மஞ்சத்தூள்... உப்பு போட்டு வதக்கவும்
 11. நன்றாக வதங்கிய தேங்காய் பால் சேர்க்கவும்.
 12. பின் கரைத்து வைத்த புளி மிளகாய் தண்ணீர் சேர்க்கவும்
 13. சேர்த்து நன்றாக கலக்கி உப்பு, காரம் பார்த்து தேவவையென்றால் போட்டு கொதிக்க விடவும்.
 14. மெதுவாக அடுப்பை சிமில் வைத்து ஒவ்வொரு உருண்டையாக போடவும்.
 15. கரண்டி போட கூடாது உடனே. கொஞ்ச நேரம் கழித்து அனைத்தும் வெந்த பின் மெதுவாக குழம்பை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்...
 16. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி

Reviews for Paruupu urundai curry in tamil (0)