வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை குழம்பு

Photo of Paruupu urundai curry by Adaikkammai Annamalai at BetterButter
61
7
0.0(0)
0

பருப்பு உருண்டை குழம்பு

Jan-02-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றி

ருசியான ஒன்று.... சுலபமானது...அனைவருக்கும் பிடித்தமான ஒன்று... கண்டிப்பா செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • சௌத்இந்தியன்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. எண்ணெய் - 6 ஸ்பூன்
 2. கடுகு - 1/2 ஸ்பூன்
 3. உளுந்து - 1 ஸ்பூன்
 4. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
 5. சோம்பு - 1/2 ஸ்பூன்
 6. வர மிளகாய் - 1 கிள்ளி போட
 7. வெங்காயம் - 2
 8. தக்காளி - 2
 9. உப்பு - தேவயனா அளவு
 10. தேங்காய் பால் - 1 கப் கெட்டியாக
 11. உருண்டைக்கு அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
 12. துவரம் பருப்பு 1 கப்
 13. வரமிளகாய் - 3 ( காரத்திற்கு தேவையான அளவு)
 14. உப்பு - சிட்டிகை
 15. சோம்பு - 1 ஸ்பூன்
 16. கர கரவென்று அரைத்து வைக்கவும்.
 17. தேவையான பொருட்கள்
 18. வரமிளகாய் - 5
 19. காய்ந்த மல்லி - 2 ஸ்பூன்
 20. தேங்காய் பூ - 2 ஸ்பூன்
 21. இஞ்சி - சிறுதுண்டு
 22. இவைகளை அரைத்து எடுத்து கொள்ளவும் . அரைத்து எடுத்து புளி கரைத்து வைத்த தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் சேர்த்து கரைத்து எடுத்துகொள்ளவும்.

வழிமுறைகள்

 1. முதலில் உருண்டைக்கு பருப்பு ஊற வைக்கவேண்டும். அதன் பின் ஊற வைத்த பருப்பை அலசி மிக்சியில் இடித்து கொள்ளவும் .
 2. அதனுடன் மிக்ஸியில் சோம்பு... உப்பு... (கொஞ்சமாக) வரமிளகாய் சேர்க்கவும்.
 3. இதை கர கரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்
 4. இதனுடன் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து உருண்டை பிடித்து வைக்கவும்
 5. அதன் பின் மசாலா அரைக்க தேவையான பொருளை எடுக்கவும்
 6. நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும் .
 7. அதன் பின் தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும் கெட்டியாக.
 8. அதனுடன் புளி கரைத்து எடுத்து அதில் அரைத்த மிளகாய் மசலவில் இருந்து 3 ஸ்பூன் தேவையா அளவு எடுத்து கரைத்து ரெடியாக வைக்கவும்.
 9. இப்பொழுது ஒரு இருப்பு சட்டியை காய வைத்து எண்ணி சேர்த்து கடுகு .. உளுந்து... சோம்பு.. வெந்தயம்.. வரமிளகாய்... கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டு பொரிய விடவும்
 10. அதன் பின் வெங்காயம் ... தக்காளி...மஞ்சத்தூள்... உப்பு போட்டு வதக்கவும்
 11. நன்றாக வதங்கிய தேங்காய் பால் சேர்க்கவும்.
 12. பின் கரைத்து வைத்த புளி மிளகாய் தண்ணீர் சேர்க்கவும்
 13. சேர்த்து நன்றாக கலக்கி உப்பு, காரம் பார்த்து தேவவையென்றால் போட்டு கொதிக்க விடவும்.
 14. மெதுவாக அடுப்பை சிமில் வைத்து ஒவ்வொரு உருண்டையாக போடவும்.
 15. கரண்டி போட கூடாது உடனே. கொஞ்ச நேரம் கழித்து அனைத்தும் வெந்த பின் மெதுவாக குழம்பை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்...
 16. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்