வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சப்ஜி

Photo of Tomato Sabji by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
75
3
0.0(0)
0

தக்காளி சப்ஜி

Jan-02-2018
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சப்ஜி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் சுவையான எளிமையான தக்காளி சப்ஜி. சிறந்த டிராவல் சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 வெங்காயம்
  2. 5 நன்கு பழுத்த தக்காளி
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. சிறிது கறிவேப்பிலை
  7. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. ​1/2 டீஸ்பூன் தனியா தூள்
  9. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் மற்றும் 3 தக்காளியை மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். 2 தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அவை வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி லேசாக நிறம் மாறிய பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். 
  4. அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. பின் 1 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்