Photo of Drumstick gravy by Asiya Omar at BetterButter
363
2
0.0(1)
0

Drumstick gravy

Jan-02-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்காய் -4
  2. பெரிய வெங்காயம் -2
  3. பூண்டு -6 பல்
  4. பெரிய தக்காளி -2
  5. பச்சை மிளகாய் -2
  6. மஞ்சள் தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா அரை தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கு.
  9. தாளிக்க:-
  10. எண்ணெய் -2 -3 மேஜைக்கரண்டி
  11. கடுகு,உளுத்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
  12. மல்லி,கருவேப்பிலை -2 இணுக்கு.
  13. கொரகொரப்பாக அரைக்க:-
  14. தேங்காய்த்துருவல் - 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முருங்கைக்காயை தோல் உரித்து விருப்பம் போல் நறுக்கி வைக்கவும்.
  2. வெங்காயம்,பூண்டை கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும் .
  3. அடுத்து தக்காளியையும் அரைத்து எடுத்து வைக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய விட்டு சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை விட்டுப் பொரிய விடவும் அரைத்த வெங்காயம் பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்க வேண்டும்.
  5. அடுத்து தக்காளி அரைத்தது,கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மசிய வதக்கவும்.
  6. மேற்கூறிய மசாலாத்தூள் வகைகள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி வதக்கவும்.
  7. நறுக்கிய முருங்கைக்காய் சேர்க்கவும்.பிரட்டி விட்டு சிறிது அரைகப் தண்ணீர் சேர்த்து உப்பும் சரி பார்க்கவும்.
  8. கொரகொரப்பாக அரைத்த தேங்காய்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி குக்கரை மூடி ஒரு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  9. சூப்பர் சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dekila Vinothkumar
Jul-30-2018
Dekila Vinothkumar   Jul-30-2018

Very super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்