வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் புளி கூட்டு

Photo of Ladies finger tamarind Kootu by Krishnasamy Vidya Valli at BetterButter
1721
3
0.0(0)
0

வெண்டைக்காய் புளி கூட்டு

Jan-02-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் புளி கூட்டு செய்முறை பற்றி

வெண்டைக்காய் தக்காளி வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த கூட்டு சாம்பார்/ரசம்/மோர் குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் - 8
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  5. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  6. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. அரைக்க : தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  9. மிளகாய் வத்தல் - 1
  10. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி ( விருப்பப்பட்டால் )
  11. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  14. மிளகாய் வத்தல் - 1
  15. எண்ணெய் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  5. வதக்கியதில் புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவிடவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  7. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்