வீடு / சமையல் குறிப்பு / Kadalai kuzhambu / Thaaniya kuzhambu

Photo of Kadalai kuzhambu / Thaaniya kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
685
2
0.0(1)
0

Kadalai kuzhambu / Thaaniya kuzhambu

Jan-02-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தானியங்கள் - (கொண்ட கடலை/ பட்டாணி/பெரும்பயறு/பச்ச பயறு- ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து ) - 1/2 கப்
  2. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  5. தேங்காய்எண்ணெய்-1தேக்கரண்டி
  6. வறுத்து அரைக்க தேவையானவை
  7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் -4
  11. கட்டி பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு / 2 சிட்டிகை
  12. எண்ணெய் - 2 டிராப்ஸ்
  13. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி( விருப்பப்பட்டால் )
  14. (தேங்காய் துருவலை மட்டும் வறுக்காமல் கூட அரைக்கலாம் )
  15. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  16. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  17. எண்ணெய் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தானியங்களை முந்தைய நாள் இரவிலோ அல்லது அதிகாலையிலோ ஊறவைக்கவும்
  2. ஊறவைத்ததை குக்கரில் வேக வைக்கவும்
  3. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து புளியை கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவிடவும்
  5. வேகவைத்த தானியங்கள் சேர்க்கவும்
  6. வறுத்து அரைத்ததை சேர்த்து கொதிக்கவிடவும்
  7. கெட்டியானதும் இறக்கி ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-03-2018
Pushpa Taroor   Jan-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்