வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கிரேவி

Photo of Mutton Gravy by Asiya Omar at BetterButter
2
8
0(0)
0

மட்டன் கிரேவி

Jan-02-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கிரேவி செய்முறை பற்றி

மட்டன் தேங்காய் சேர்க்காமல் சமைத்தால் அதன் சுவையே தனி தான்.இந்த முறையில் செய்து பாருங்க.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டுக்கறி - அரைக்கிலோ
  2. எண்ணெய் -2-3 மேஜைக்கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது -2+1 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  5. நறுக்கிய பெரிய வெங்காயம்-2
  6. பெரிய தக்காளி -1
  7. பச்சை மிளகாய் -2
  8. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  9. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் - ஒன்னரை தேக்கரண்டி
  12. சீரகத்தூள் - அரை அல்லது 1 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. கறியை நன்கு அலசி தண்ணீர் வடித்து மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.
  2. அடுத்து தக்காளி,பச்சை மிளகாய் ,மல்லி இலை, உப்பும் சேர்த்து வதக்கவும்.
  3. மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
  4. ஊற வைத்த கறி சேர்க்கவும்.தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு காரம் சரி பார்த்து மூடவும்.
  5. 5 வசில் அல்லது 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  6. திறந்து கொதிக்க விடவும்.
  7. வெந்த கறியில் சிறிது தண்ணீர் இருந்தால் வற்ற விடலாம். எங்க ஊர் பக்கம் கிரேவி கெட்டியாக ஒரே ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து ஒரு சிலர் சேர்ப்பார்கள் . அடுப்பைக் குறைத்து வைக்கவும்.எண்ணெய் மேலே வந்து கெட்டியாகும்.அடுப்பை அணைக்கவும்.
  8. சூப்பர் சுவையுள்ள மட்டன் கிரேவி தயார்.
  9. சூடான சாதம்,புலாவ்,பிரியாணி ,சப்பாத்திக்கு அருமையாகயிருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்