Photo of Ashoka halwa easy method by Adaikkammai Annamalai at BetterButter
416
11
0.0(1)
0

Ashoka halwa easy method

Jan-03-2018
Adaikkammai Annamalai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசி பருப்பு - 1 1/4 கப்
  2. சர்க்கரை - 1 1/2 கப்
  3. நெய் - 6 பெரிய ஸ்பூன்
  4. கோதுமை மாவு - 1 ஸ்பூன்
  5. முந்திரி - 6
  6. திராட்சை - 4
  7. கலர் - ஆரஞ்சு அல்லது சிவப்பு

வழிமுறைகள்

  1. முதலி பாசி பருப்பை அலசி குக்கரில் குழைவாக வேக வைக்கவும்ம
  2. குழைவாக வெந்த பின் இறக்கி ஆறிய பின் மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. அதன் பின் தேவையான பொருள் அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு நான் ஸ்டிக் பேனில் நெய் 2 பெரிய ஸ்பூன் காய வைக்கவும்.
  5. அதில் முந்திரி.. திராட்சையை பொடிசாக நறுக்கி போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. பொன்னிறமாக வந்தவுடன் முந்திரி திராட்சையை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்
  7. அதன் பின் அதே பேனில் அடுப்பை ஆஃப் செய்து அந்த சூடான நெய்யுடன் 1 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்து கொள்ளவும்.
  8. அதன் பின் பேனில் அரைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்
  9. சேர்க்கும்போது அடுப்பை சிமில் வைத்து அதன் பின் புள்ளில் வைத்து கிண்டவும்..
  10. அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும்
  11. சேர்த்து நன்றாக கலக்கவும் சீனி கரையும் வரை
  12. சீனி நன்கு கரைந்தவுடன் 4பெரிய ஸ்பூன் நெய் சேர்க்கவும்
  13. சேர்த்து நன்றாக கிளறவும்
  14. அதன் பின் கடைசியாக சிவப்பு கலர் அதிகமாக சேர்த்தால் வெறுக்கும் அதனால் ஒரு டம்லரில் அரை கப் தண்ணியுடன் 1 சொட்டு கலர் சேர்த்து கரைத்து எடுத்து கொள்ளவும்
  15. அதி மெதுவாக தேவையனா கலர் வரை சேர்த்து கிண்டவும்
  16. வெந்த பின் பொரித்து வைத்த முந்திரி திராட்சயை சேர்க்கவும்
  17. அடுத்தபடியாக நெய்யுடன் கிளறி வறுத்து வைத்த கோதுமை மாவை சேர்க்கவும்
  18. நன்றாக கிளறி பதம் வரும் வரை கிண்டவும்
  19. ஒட்டாமல் பதம் சுருள வந்த பின்
  20. ஒரு பௌலில் நெய்த் தடவி அள்ளி வைக்கவும்
  21. சுவையான அசோகா ஹல்வா ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Jan-03-2018
Yasmin Shabira   Jan-03-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்