வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி இனிப்பு பொங்கல்

Photo of Barnyard millet sweet pongal by Ashwini Rajendran at BetterButter
875
9
0.0(0)
0

குதிரைவாலி இனிப்பு பொங்கல்

Jan-03-2018
Ashwini Rajendran
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி இனிப்பு பொங்கல் செய்முறை பற்றி

சிறுதானியம் மற்றும் வெல்லத்தின் நற்பயன்கள் கொண்ட உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குதிரைவாலி அரிசி 1 கின்னம்
  2. தண்ணீர் 3 கின்னம்
  3. வெல்லம் 3/4 கின்னம்
  4. ஏலக்காய் 2
  5. நெய் 2 மேசைக்கரண்டி
  6. முந்திரி 10

வழிமுறைகள்

  1. குதிரை வாலி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. சிறிது நேரம் கழித்து குக்கரில் அரிசியுடன் 3 கின்னம் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் வைத்து வேக வைக்கவும்.
  3. ஒரு கின்னத்தில் வெல்லத்துடன், ஏலக்காய், 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
  4. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து, கொதிக்க வைத்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
  5. சிறிய தீயில் சற்று நேரம் வைக்கவும்.
  6. தாளிப்பு கரண்டியில் நெய் சூடு செய்து, முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
  7. நன்கு கிளறி அடுப்பை அனைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்