வீடு / சமையல் குறிப்பு / பலதானிய பொங்கல்

Photo of Multi millet pongal by Sowmya Sundar at BetterButter
568
9
0.0(0)
0

பலதானிய பொங்கல்

Jan-04-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பலதானிய பொங்கல் செய்முறை பற்றி

பொங்கல் பண்டிகை நாட்களில் பலவிதமான சிறுதானியங்கள் கலந்து செய்யலாம் இந்த சத்தான பொங்கல் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. திணையரிசி- 1/4 கப்
  2. வரகரிசி- 1/4 கப்
  3. சாமை - 1/4 கப்
  4. குதிரை வாலி - 1/4 கப்
  5. பாசிப்பருப்பு- 1/4 கப்
  6. தண்ணீர் -4 கப்
  7. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  8. நெய் - 2 தேக்கரண்டி
  9. முந்திரி பருப்பு- 2 டீஸ்பூன்
  10. மிளகு - 2 டீஸ்பூன்
  11. சீரகம்- 1 டீஸ்பூன்
  12. இஞ்சி- நறுக்கியது 1 டீஸ்பூன்
  13. உப்பு
  14. கறிவேப்பிலை மல்லி - சிறிது
  15. பால் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. சிறுதானியங்களை களைந்து குக்கரில் பாசிப்பருப்பு ,பால் மற்றும தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
  2. வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. மிளகு சீரகம் ஒண்றிரண்டாக பொடித்து கொள்ளவும்
  4. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை மிளகு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வேக வைத்ததை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  5. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்