வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் பொங்கல்

Photo of Oats pongal by saranya sathish at BetterButter
439
8
0.0(0)
0

ஓட்ஸ் பொங்கல்

Jan-05-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் பொங்கல் செய்முறை பற்றி

ஓட்ஸ் பயன்படுத்தி செய்த கார பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓட்ஸ் - 2 கப்
  2. பாசிப்பருப்பு – 1 கப்
  3. வறுத்த முந்திரி-10
  4. மிளகு- 2 ஸ்பூன்
  5. சீரகம் - 1 ஸ்பூன்
  6. இஞ்சி-சிறிதளவு
  7. கறிவேப்பிலை-சிறிது
  8. பச்சை மிளகாய் - 2
  9. நெய் - தேவையான அளவு
  10. தண்ணீர்-தேவையான அளவு
  11. பெருங்காயத்தூள்-சிறிதளவு
  12. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பை கடாயில் சேர்த்து சிறிது நெய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  2. பின் சிறிது நெய்யில் ஓட்ஸ் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  3. பின்னர் கடாயில் பருப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. பருப்பு நன்றாக வெந்ததும் ஓட்ஸ், உப்பு சேர்த்து கலந்து விடவும். சிறிது நெய் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும்.
  6. பின் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஓட்ஸ் பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  7. வறுத்த முந்திரி சேர்த்து கலந்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்