செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல் | Cherry flavoured Sweet Pongal in Tamil

எழுதியவர் Priya Lakshminarayan  |  3rd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cherry flavoured Sweet Pongal by Priya Lakshminarayan at BetterButter
செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல்Priya Lakshminarayan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

10

0

செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல் recipe

செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cherry flavoured Sweet Pongal in Tamil )

  • அலங்கரிக்க பாதாம்
  • 3-4 துளிகள் சிவப்பு நிறம்
  • 3 கட்டி வெல்லம்/6 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை
  • 1/4 கப் தண்ணீர்
  • 8-10 குழிவிழுந்த செர்ரிக்கள்
  • 2 தேக்கரண்டி நெய்/தெளிவுபடுத்திய வெண்ணெய்
  • 1/2 கப் பாசிப்பருப்பு (பச்சைப் பருப்பு)
  • 1 கப் அரிசி

செர்ரி சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி | How to make Cherry flavoured Sweet Pongal in Tamil

  1. குழிவிழுந்த செர்ரிக்களை நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு சிறிய வானலியில், இந்த செர்ரிக்கள், தண்ணீர் மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் உறுகட்டும், செர்ரி கூழாகும்வரை.
  3. இதற்கிடையில் அரிசியையும் பாசிப்பருப்பையும் (பச்சைப் பருப்பு) ஒன்றாக கொதிக்கவைக்கவும்/வேகவைக்கவும்.
  4. வெல்லம் முழுமையாகக் கரைந்து, சாறு அடர் சிவப்பு நிறம் பெற்றதும், வெளியில் எடுத்து தீயை நிறுத்தவும்.
  5. சாதத்தில் இந்தச் சாற்றை வடிகட்டி வழியாக சேர்க்கவும். சாதத்தை ஒரு கலக்கு கலக்கவும்.
  6. அதனோடு சிவப்பு நிறத்தைச் சேர்க்கவும்.
  7. இப்போது தெளிவாக்கப்பட்ட வெண்ணெய்/நெய்யை இவற்றோடு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
  8. நறுக்கப்பட்டப் பாதாமைக் கொண்டு அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Reviews for Cherry flavoured Sweet Pongal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.