வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பருப்பு அல்லது சிவப்பு பருப்பு

Photo of Masoor ki Dal or Red Lentils by Ruchira Hoon at BetterButter
19405
251
4.3(0)
0

மைசூர் பருப்பு அல்லது சிவப்பு பருப்பு

Jul-27-2015
Ruchira Hoon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் மைசூர் பருப்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தது
  2. 1 பல் பூண்டு நறுக்கியது
  3. 1 சின்ன வெங்காயம் நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  7. 1/2 தேக்கரண்டி எண்ணெய்
  8. 1 பிரிஞ்சி இலை
  9. 1 கப் தண்ணீர்
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. 1 தேக்கரண்டி நெய் அல்லது கடைந்த வெண்ணெய்
  12. 3 பல் பூண்டு நறுக்கியது
  13. அலங்கரிக்க கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. 1. ஒரு பிரஷர் குக்கரில், எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும். சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
  2. 2. பிரிஞ்சி இலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வெங்காயம் மிருதுவாகும்வரை வதக்கவும். மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு சேர்க்கவும்.
  3. 3. ஊறவைத்த அனைத்துப்பொருள்களையும் தண்ணீரில் சேர்த்து கலக்கி பிரஷர் குக்கரில் மூன்று விசில்களுக்கு வேகவைக்கவும். உங்களிடம் பிரஷர் குக்கர் இல்லையெனில், இரட்டிப்புத் தண்ணீர் எடுத்து மிதமானச் சூட்டில் 25 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. 4. இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்தி நறுக்கிய பூண்டை அதனோடு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  5. 5. பருப்பு போதுமான அளவு ஆறியதும் திறந்து பூண்டு தாளிப்பை கொத்துமல்லியோடு சேர்க்கவும். சுவையை சரிசெய்து உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரைச் சேர்க்கவும்.
  6. 6. சாதம் அல்லது ரொட்டியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்