வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பூரண் போளி

Photo of Beetroot Pooran Boli by Sowmya Sundar at BetterButter
702
5
0.0(0)
0

பீட்ரூட் பூரண் போளி

Jan-06-2018
Sowmya Sundar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பூரண் போளி செய்முறை பற்றி

போகி பண்டிகை அன்று போளி செய்வது வழக்கம். இந்த முறை பீட்ரூட் போளி செய்து அசத்துங்கள். ஆரோக்கியத்திற்காக மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவை பயன்படுத்தி உள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேல் மாவிற்கு :
  2. கோதுமை மாவு - 2 கப்
  3. நெய் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. பூரணம் செய்ய:
  6. பீட்ரூட் துருவல்- 1 கப்
  7. தேங்காய் துருவல் - 1 கப்
  8. வெல்லம்- 2 கப்
  9. ஏலக்காய் பொடி- 1/4 டீ ஸ்பூன்
  10. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. பொட்டுகடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேல் மாவிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு சிறிது தளர்ந்து இருக்க வேண்டும்.
  2. அதை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. கடாயில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின்னர் தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சுருள வதக்கவும் .பொட்டு கடலைமாவு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  6. மாவை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  7. ஒரு உருண்டை மாவை சப்பாத்தி போல தேய்த்து நடுவில் ஒரு பூரணம் வைத்து கொள்ள வேண்டும்
  8. பின்னர் அதை மூடி மெதுவாக தேய்த்து கொள்ளவும். அல்லது லேசாக தட்டி கொள்ளலாம்.
  9. இதை போல் எல்லா போளிகளையும் செய்து கொள்ளவும்.
  10. தோசைக்கல்லை சூடாக்கி ஒவ்வொரு போளிகளையும் நெய் விட்டு நன்றாக வேக விடவும்.
  11. போளியை பிய்த்தால் இது போன்று முழுவதும் பூரணம் இருந்தால் தான் சுவையாக இருக்கும்
  12. சுவையான பீட்ரூட் போளி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்