Photo of Besan Laddu by Bena Aafra at BetterButter
661
14
0.0(3)
0

Besan Laddu

Jan-06-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைமாவு
  2. சர்க்கரை
  3. முந்நிரி பருப்பு
  4. பாதாம்
  5. பிஸ்தா
  6. நெய்

வழிமுறைகள்

  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2 கப் சர்க்கரை சேர்த்து 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு நன்றாக பாகை காய்ச்ச வேண்டும்.
  2. நன்றாக கெட்டியான பதத்தில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து சர்க்கரை பாகை கிளறி ஆறவிட்டு ஆறியவுடன் வரும் சர்க்கரை பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.
  3. அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு உருகியதும் கடலைமாவு சேர்த்துக் கட்டி இல்லாமல் கிளறி விடவும்.
  4. நன்றாக கடலைமாவு வாசம் போகும் வரை கிளறி விடவும்.
  5. அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
  6. பால்கோவா பதத்தில் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும்.
  7. அடிபிடிக்காமல் இருக்கும்.
  8. பின் கட் செய்து வைத்துள்ள பாதாம், முந்நிரி, பிஸ்தா சேர்த்து கை தொடும் சூட்டில் மாவில் கலந்து கொள்ள வேண்டும்.
  9. கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
  10. அவற்றின் மேல் குங்குமப்பூ அல்லது பொடியாக நறுக்கிய பிஸ்தா garnish ஆக வைக்க வேண்டும்.
  11. இதேபோல் அனைத்து லட்டுகளையும் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  12. இவற்றை 7 அல்லது 8மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
  13. பின் இவற்றை சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து காற்று செல்லாதவாறு அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து 2 வாரம் உபயோகப் படுத்தலாம்.
  14. மிகவும் ருசியாக கடலைமாவு லட்டு ரெடி.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bena Bava
Jan-09-2018
Bena Bava   Jan-09-2018

Good

Sakkarai Bava
Jan-06-2018
Sakkarai Bava   Jan-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்