Photo of Thothal by Banupriya Jawahar at BetterButter
204
9
0.0(2)
0

Thothal

Jan-07-2018
Banupriya Jawahar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு அரிசி 1/2 கிலோ
  2. தேங்காய் 6
  3. பனங்கருப்பட்டி 2 கிலோ
  4. சர்க்கரை 1 கிலோ
  5. ஜவ்வரிசி 1/4 கிலோ
  6. பாசிப்பயறு 1கைப்பிடி
  7. நெய் 1/4 கிலோ
  8. ஏலக்காய் 1/2 தேக்கரண்டி
  9. முந்திரி 100 கிராம்

வழிமுறைகள்

  1. அரிசியைக் களைந்து நீரை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும்.
  3. ஜவ்வரிசியை குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பாசிப்பயறை வாசனை வரும் வரை வறுத்து பொடிக்கவும்.
  5. தேங்காயை உடைத்து பால் எடுக்கவும்.
  6. அடுப்பில், ஒரு வாயகன்ற கனமான பாத்திரத்தை ஏற்றவும்.
  7. அதில் சிவப்பு அரிசி மாவு, ஊறிய ஜவ்வரிசி, தேங்காய் பால் சேர்த்து, மிதமான தீயில் கிளறவும்.
  8. கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை மற்றும் கருப்பட்டி சேர்த்து கிளறவும்.
  9. நெய் சேர்த்து சுருள கிண்டவும்.
  10. அடி பிடிக்காமல், பக்குவமாய் கிண்டவும்.
  11. தேங்காய் பால், எண்ணெயாக பிரிந்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிண்டவும்.
  12. கொதிக்கும் கலவை கையில் தெறித்து விடாமல் கவனமாக சுமார் 45 - 50 நிமிடங்கள் வரை கிண்டவும்.
  13. எண்ணெய் பிரிந்து வரும் போது நெய்யில் வறுத்த முந்திரி, வறுத்து பொடித்த பாசிப்பயறு, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.
  14. இறக்கிய கலவையை கனமான தட்டில் ஊற்றி ஆற விடவும்.
  15. சுவையான தொதல் தயார்.
  16. சுட சுட உடனே சாப்பிடுவதை விட, மறுநாள் சாப்பிட சுவையாக இருக்கும்.
  17. கைபடாமல், தண்ணீர் படாமல் பத்திரமாக வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாது.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-09-2018
Pushpa Taroor   Jan-09-2018

Good

Prarthanaa Jawahar
Jan-09-2018
Prarthanaa Jawahar   Jan-09-2018

gr8

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்