வீடு / சமையல் குறிப்பு / முக்கூட்டு வடை

Photo of Tri dal vadai by Sowmya Sundar at BetterButter
526
6
0.0(0)
0

முக்கூட்டு வடை

Jan-08-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முக்கூட்டு வடை செய்முறை பற்றி

மூன்று வகையான பருப்பு வகைகள் சேர்த்து செய்யும் வடை இது .பொங்கல் அன்று செய்து மகிழலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலைப்பருப்பு- 1 1/2 கப்
  2. துவரம் பருப்பு- 1/2 கப்
  3. உளுத்தம்பருப்பு - 1/4 கப்
  4. பச்சை மிளகாய்- 3
  5. வற்றல் மிளகாய்- 4
  6. உப்பு
  7. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை மல்லி சிறிது

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகள் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு பிடி கடலைப்பருப்பு தனியாக ஊற வைக்கவும்.
  2. பின்னர் தண்ணீர் நன்கு வடித்து விட்டு உப்பு மிளகாய் பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. தனியாக ஊற வைத்த பருப்பை வடித்து அரைத்த வடை மாவுடன் கலந்து கொள்ளவும். இது வடையை மொறுமொறுப்பாக செய்யும் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும் .
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்