வீடு / சமையல் குறிப்பு / Bamboo rice sugarcane juice sweet pongal

Photo of Bamboo rice sugarcane juice sweet pongal by saranya sathish at BetterButter
422
7
0.0(1)
0

Bamboo rice sugarcane juice sweet pongal

Jan-08-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. மூங்கில் அரிசி - 1/4 கப்
 2. பாசிப்பருப்பு - 1/8 கப்
 3. வெல்லம் - 1/8 கப்
 4. இஞ்சி - சிறிது
 5. கரும்பு சாறு - 1 1/2 கப்
 6. தண்ணீர் - தேவையான அளவு
 7. வறுத்த முந்திரி திராட்சை - சிறிது
 8. நெய் - சிறிது

வழிமுறைகள்

 1. பாசிப்பருப்பை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.
 2. அரிசியை கழுவி இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
 3. கரும்பை சிறிய துண்டுகளாக கட் செய்து மிக்ஸியில் சேர்த்து தண்ணீர், தோல் சீவி கட் செய்த இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
 4. பின் சாறை வடிகட்டவும். இதே போல் இரண்டு முறை சாறு பிழிந்து வைக்கவும்.
 5. ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்.
 6. பின் ஒரு கடாயில் அரிசி பருப்பு கரும்பு சாறு சேர்த்து கலந்து நன்றாக வேகவிடவும்.
 7. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும்.
 8. பின்னர் அதை வடிகட்டவும்.
 9. அரிசி பருப்பு நன்றாக வெந்ததும் கரைத்த வெல்லம் சேர்த்து கலக்கவும். பின்னர் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Jan-09-2018
Ayesha Ziana   Jan-09-2018

Awesome pongal rcp

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்