Photo of Soyabeans masal by Asiya Omar at BetterButter
308
10
0.0(1)
0

Soyabeans masal

Jan-08-2018
Asiya Omar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா பீன்ஸ் ஊற வைக்க - ஒரு கப்
  2. தாளிக்க :-
  3. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  4. கடுகு,உ.பருப்பு - 1 தேக்கரண்டி
  5. சோம்பு -1/2 தேக்கரண்டி
  6. நறுக்கிய வெங்காயம் -1
  7. நறுக்கிய தக்காளி -1
  8. இஞ்சிப்பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா,மஞ்சள்தூள் - தலா கால் தேக்கரண்டி
  12. மல்லி,கருவேப்பிலை
  13. உப்பு - தேவைக்கு.
  14. அரைக்க:-
  15. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  16. பட்டை - மிகச் சிறிய துண்டு.
  17. தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. சோயா பீன்ஸ் ஒரு கப் எடுக்கவும்.
  2. எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. ஊறிய பின்பு பிரசர் குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
  4. இனி மசால் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி,இஞ்சி பூண்டு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  5. தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்த்தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்.வேக வைத்த சோயா பீன்ஸ் சேர்த்து பிரட்டவும்.
  6. அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய மல்லி,கருவேப்பிலை சேர்க்கவும்.
  7. சுவையான சோயா பீன்ஸ் மசால் தயார்.
  8. பக்க உணவாக அல்லது மாலை நேர சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-09-2018
Pushpa Taroor   Jan-09-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்