வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato Thokku by saranya sathish at BetterButter
538
5
0.0(0)
0

தக்காளி தொக்கு

Jan-08-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

தக்காளி விழுது வைத்து செய்த தொக்கு. வெண் பொங்கல், பால்/வெள்ளை பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி பழம் - 10
  2. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. கடுகு - 1 சிறிய டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி பழத்தை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து வைக்கவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பின்னர் தக்காளி விழுது சேர்த்து கலந்து விடவும்.
  4. குறைந்த தீயில் நன்றாக வேகவிடவும்.
  5. தக்காளி விழுது நன்றாக வெந்து சற்றே கெட்டியாகும் வரை கலந்து விடவும். இந்த பதம் வர 20 முதல் 30 நிமிடம் வரை ஆகும்.
  6. அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கலந்து விடவும்.
  7. பின் ஒரு சிறு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாளிக்கவும். பின் அடுப்பை அனைக்கவும். பின் அதே கடாயில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பெருங்காயம் தூள் சேர்த்து கலந்து தக்காளி தொக்கில் சேர்த்து நன்கு கலந்து மேலும் 10 நிமிடம் வேக விட்டு பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்