வீடு / சமையல் குறிப்பு / காரக்குழம்பு

Photo of Kara kuzhambu / Spicy  gravy by Asiya Omar at BetterButter
539
7
0.0(0)
0

காரக்குழம்பு

Jan-08-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காரக்குழம்பு செய்முறை பற்றி

தென்னிந்திய பாரம்பரிய பரிமாறலில் காரக் குழம்பிற்கு நிச்சயம் ஒரு இடமுண்டு,சுலபமான செய்முறை இதோ.பொதுவாக கத்திரிக்காய்,முருங்கைக்காய் சேர்த்து செய்வது வழக்கம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கத்திரிக்காய் - கால் கிலோ
  2. வாழைக்காய் -2 அல்லது முருங்கைக்காய்
  3. சின்ன வெங்காயம் -100 கிராம்
  4. தக்காளி -100 கிராம்
  5. பூண்டு - 10 பல்
  6. சாம்பார் பொடி - 4 -6 தேக்கரண்டி
  7. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  8. உப்பு - தேவைக்கு.
  9. காரம் தூக்கலாக இருந்தால் ஒரு தேக்கரண்டி வெல்லம் பொடித்துச் சேர்க்கவும்.
  10. தாளிக்க:-
  11. நல்ல எண்ணெய் -3 -4 மேஜைக்கரண்டி
  12. கடுகு,உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. வெந்தயம் - கால் தேக்கரண்டி
  14. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை ,மல்லி இலை -சிறிது.
  16. தேங்காய் அரைத்தது - கால் கப் சேர்க்கலாம்.

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய், வாழைக்காய்,சின்ன வெங்காயம்,பூண்டு நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும்.புளி ஊற வைத்து வைக்கவும்.தக்காளி பிணைந்து வைக்கவும்.
  2. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்து கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. கத்திரிக்காய்,வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.விரும்பினால் வாழைக்காய் பதில் முருங்கைக்காய் சேர்க்கலாம்.
  5. சாம்பார் பொடி சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
  6. தக்காளி நன்கு பொடியாக நறுக்கி கையால் பிணைந்து புளிக்கரைசலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.
  7. கெட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு ஊற்றும் பதத்தில் இருக்க வேண்டும்.புளி மசாலா வாடை மடங்கி வர வேண்டும்.காயும் நன்கு வெந்திருக்க வேண்டும்.
  8. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். தேங்காய் அரைத்தது சேர்த்து கொதிக்க வைக்கவும்.விரும்பினால் வெல்லம் சேர்க்கலாம்.
  9. சுவையான காரக்குழம்பு தயார்.
  10. சூடான சாதத்துடன் பரிமாறவும். கூட்டு,பொரியல் அப்பளத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்