வீடு / சமையல் குறிப்பு / நவதானிய பால் கொழுக்கட்டை

Photo of Navathaanaiya paal kolukkattai by Mughal Kitchen at BetterButter
487
6
0.0(0)
0

நவதானிய பால் கொழுக்கட்டை

Jan-08-2018
Mughal Kitchen
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

நவதானிய பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

Sprouted grain paal kolukkattai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பாசிபயறு,கொண்டைகடலை,கொள்ளு.உளுந்து.பயறுகளாக வாங்கி முனளகூட்டி கொள்ளவும் தலா 50 கிராம்
  2. எள்வறுத்து பொடித்துகொள்ளவும் 1 மேஜைக்கரண்டி
  3. அரிசிமாவுவறுத்தது 50 கிராம்
  4. கோதுமைமாவு லேசாகவறுத்து 50 கிராம்
  5. துவரைபருப்பு உறவைத்து அரைக்கவும் 50 கிராம்
  6. தேங்காய் அரைமூடியில் பாதி
  7. பாதம் பருப்பு 50 கிராம்
  8. கசகசா 10 கிராம்
  9. பசும்பால் ஒருலிட்டா்
  10. மண்டைவெல்லம் 300கிராம்

வழிமுறைகள்

  1. நவதானியகளை மிக்ஸியில் அரைக்கவும்.அரிசி.கோதுமை வறுத்த மாவை சேர்க்கவும்.துவரம்பருப்பையும் அரைத்து சேர்க்கவும் .எள் சேர்க்கவும்.
  2. ஒரே பாத்திரத்தில் கலக்கவும்
  3. ஒரு சிட்டிகை உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
  5. மிக்ஸியில் பாதாம், தேங்காய்.கசகசா வை அரைத்து கொள்ளவும்.
  6. நைசாக அரைக்கவும்
  7. மண்டைவெல்லத்தில் ஒருடம்ளா் நீர் விட்டு காய்ச்சவும்.
  8. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றவும். கொதி வரும் போது அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
  9. பின் உருண்டைகளை சேர்க்கவும்
  10. உருண்டை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கிளறவும்
  11. பத்து நிமிடம் வேக விடவும்
  12. பின் மண்டைவெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும்.இரண்டு ஸ்பூன் அரிசி மாவை கரைத்து ஊற்றவும். சிறிது ஏலக்காய்தூள் சேர்க்கவும்.பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  13. மேலே ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சத்தான முளைகூட்டிய நவதானிய பால் கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்