Rice Poori | Rice Poori in Tamil

எழுதியவர் Ashwini Rajendran  |  9th Jan 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Rice Poori by Ashwini Rajendran at BetterButter
  • ஆயத்த நேரம்

    4

    1 /2 மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

1

6 votes
Rice Poori

Rice Poori தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice Poori in Tamil )

  • இட்லி அரிசி 1 கின்னம்
  • துவரம் பருப்பு 2 மேசைக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் 7
  • பூண்டு 6
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Rice Poori செய்வது எப்படி | How to make Rice Poori in Tamil

  1. அரிசி மற்றும் துவரம் பருப்பை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் நன்கு வடித்து விட வேண்டும்.
  3. ஆட்டு கல்லில் மிளகாய், பூண்டு, உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி, பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடு செய்யவும்.
  5. அரைத்த மாவில் இருந்து சிறிது மாவு எடுத்து ஒரு துணியின் மீது வைத்து கைகளால் பூரியை விட சற்று கனமாக தட்ட வேண்டும்.
  6. தட்டிய பின் மிக சூடான எண்ணெயில் பிரித்து எடுக்கவும்.

எனது டிப்:

மாவு கெட்டியாக இருக்க வேண்டும். எண்ணெய் மிக சூடாக இருக்க வேண்டும்.

Reviews for Rice Poori in tamil (1)

Pushpa Taroor2 years ago

Siper
Reply