Photo of Chettinaad Thenkulal by Adaikkammai Annamalai at BetterButter
819
17
5.0(4)
0

Chettinaad Thenkulal

Jan-09-2018
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 4 டம்ளர்
  2. உளுந்து -300 gm
  3. பொட்டுக்கடலை - 50 gm
  4. எண்ணெய் - சூடு செய்து சேர்த்து பிசைவதற்கு சிறிது.., பொரிப்பதற்கு எண்ணெய்
  5. உப்பு - தேவையான அளவு
  6. தண்ணீர் - பிசைவதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சரிசி 4 டம்ளர் எடுத்து ஊற வைக்கவும். அதன் பின் அதை அலசி எடுத்து ஒரு துணியில் காயவைக்கவும்
  2. காய்ந்த பின் அதை மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும் . அரைத்து எடுத்து அதை சலித்து கொள்ளவும் . 4 டம்ளர் பச்சரிசி மாவு எடுத்து கொள்ளவும்
  3. அப்படி பச்சரிசி மாவு கடையில் கிடைத்தால் பச்சரிசி மாவு வாங்கி 4 டம்ளர் எடுத்து சலித்து எடுத்து கொள்ளவும்.
  4. அடுத்தது உளுந்தபருப்பை லேசாக வறுத்து ரொம்பவும் சிவக்காமல் நடு நிலையாக வறுத்து எடுத்து கொள்ளவும்
  5. அதன் பின் மிஸ்யில் வறுத்த உளுந்து மற்றும் பொட்டுகடலையை சேர்த்து அரைத்து எடுத்து சலித்து வைத்து கொள்ளவும்
  6. சலித்து வைத்த பச்சரிசி மாவு மற்றும் உளுந்த மாவை ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு போட்டு சேர்த்து கிளறவும்
  7. அதனுடன் எண்ணெய் 3 ஸ்பூன் சூடு செய்து அந்த மாவில் சேர்க்கவும்
  8. தேவையான அளவு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை பிசைந்து எடுத்து கொள்ளவும் முறுக்கு பிழியும் பதத்திற்கு .
  9. தேன்குழல் முறுக்கு மாவு தயார்
  10. இருப்புசட்டியில் எண்ணையோ அல்லது டால்டாவோ பொரிக்கும் அளவிற்கு சேர்க்கவும்
  11. எண்ணெய் நன்றாக காய்ந்த பின் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  12. முறுக்கு அச்சை கொண்டு கையில் எண்ணெய் தொட்டு மாவை எடுத்து உருட்டி குழலில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து நேரடியாக அடுப்பில் பிழியவும்.
  13. குமிழ் அடங்கிய பின் மெதுவக திருப்பி போட்டு சிவக்காமல் எடுக்கவும்.
  14. சுவையான செட்டிநாடு தேன்குழல் தயார்

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ummu Jazib
Jan-10-2018
Ummu Jazib   Jan-10-2018

வறுத்தமாவு சேர்த்து செய்யலாமா?

neela karthik
Jan-10-2018
neela karthik   Jan-10-2018

Hi idly rice la panna mudiyuma measurement ple

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்