வீடு / சமையல் குறிப்பு / முப்பருப்பு சாதம்

Photo of Muparuppu Sadham by Sowmya Sundar at BetterButter
423
7
0.0(0)
0

முப்பருப்பு சாதம்

Jan-09-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முப்பருப்பு சாதம் செய்முறை பற்றி

பொங்கல் மறுநாள் கவவை சாத வகைகள் மற்றும் கூட்டாஞ்சோறு செய்து வழக்கம். அன்று மூன்று வகை பருப்பு சேர்த்து சத்தான இந்த முப்பருப்பு சாதம் செய்யலாம். காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி - 2 கப்
  2. துவரம் பருப்பு- 1/2 கப்
  3. பாசிப்பருப்பு- 1/4 கப்
  4. கடலை பருப்பு- 1/4 கப்
  5. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  6. உப்பு
  7. மிளகாய் வற்றல் - 4
  8. சின்ன வெங்காயம்- 10
  9. தக்காளி- 2
  10. பூண்டு- 10 பல்
  11. கடுகு 1 டீஸ்பூன்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை மல்லி சிறிது
  14. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து பின் சின்ன வெங்காயம பூண்டு் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் அதில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் களைந்து சேர்க்கவும்.
  3. 9 டம்ளர் தண்ணீர் சேர்த்து( 1:3 விகிதம்) உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை வந்ததும் இறக்கவும்.சாதம் குழைய இருக்க வேண்டும்.
  4. நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்